சீன ராணுவத்தினர் கடத்தும் இந்திய இளைஞர்கள் சித்ரவதை அனுபவிப்பது எப்படி? - அனுபவம் பகிரும் அருணாச்சல பிரதேச இளைஞர்!

0 12184
டோங்லே சிங்காம்

ருணாச்சல பிரதேச மாநிலத்தில், இந்திய - சீன எல்லைப் பகுதியில் வசிக்கும் இந்திய இளைஞர்கள் அடிக்கடி சீன ராணுவத்தினரால் கடத்தப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட ஐந்து இந்தியர்கள் சீன ராணுவத்தினரால் கடத்தப்பட்டனர். இந்திய ராணுவத்தின் பெரும் முயற்சிக்குப் பிறகு அவர்கள் ஐந்து பேரும் பத்திரமாக விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், அருணாசலப் பிரதேசத்தில் சுபன்சிரி மாவட்டத்திலிருந்து, கடந்த மார்ச் மாதம் சீன ராணுவத்தினரால் கடத்தப்பட்ட டோக்லே சிங்காம் எனும் 21 இளைஞர் ஒருவர் 15 நாள்கள் சீன ராணுவ முகாமில் எப்படி சித்ரவதையை அனுபவித்தார் என்பதைப் பகிர்ந்துள்ளார்.

“கடந்த மார்ச் மாதம் 19 - ம் தேதியன்று இந்திய எல்லைக்குட்பட்ட வனப் பகுதிக்கு வேட்டையாடி, உணவு சேகரிப்பதற்காகச் சென்றிருந்தேன். அப்போது நான் எதிர்பார்க்கவில்லை, திடீரென்று சீன ராணுவத்தினர் என்னை சூழ்ந்துகொண்டனர். என்னால் அங்கிருந்து ஓடமுடியவில்லை. ஏனெனில், அவர்கள் நிறைய பேர் அங்கு இருந்தனர்.

என் கை, கால்களைக் கட்டி, கருப்புப் பையால் முகத்தை மூடி தூக்கிச் சென்றனர். நான் கண்களைத் திறந்தபோது சீன ராணுவ முகாம் ஒன்றில் இருந்தேன். என்னைக் கட்டிவைத்து அடித்தனர். பிறகு, என் முகத்தை மூடி வாகனத்தில் வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அடித்தனர். இருட்டு அறைக்குள் 15 நாள்கள் கிடத்தப்பட்டிருந்தேன். என் கண்களை மூடக்கூட அவர்கள் அனுமதிக்கவில்லை. தூக்கம் வந்து கண்களை மூடினாலே என்னை அடித்து உதைத்தனர். ‘நான் இந்தியாவுக்கு உளவு வேலை பார்க்கிறேன்’ என்று ஒப்புக்கொள்ளச் சொல்லி, இருக்கையில் அமரவைத்து என் மீது மின்சாரம் பாய்ச்சி துன்புறித்தினர். ஆனால், நான் கடைசி வரை ஒப்புக்கொள்ளவே இல்லை.

எனது கையெழுத்துகளைச் சேகரித்துச் சோதித்துப் பார்த்தனர். நான் பள்ளிக்கூடத்துக்குக் கூட சென்றதில்லை. அதனால், எனக்கு ஆங்கிலமும்  ஹிந்தியும் தெரியாது. ஹிந்தியில் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசுவேன். அதனால், அவர்கள் என்னை மொபைலில் பேசச்சொல்லி மொழிபெயர்த்து என்னிடம் பேசினர். அவர்கள் என்னிடம் எதிர்பார்த்தது ஒன்றே ஒன்றுதான். நான் இந்திய ராணுவத்துக்காகப் பணியாற்றுகிறேன் என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தனர். 15 நாள்கள் சீன முகாமில் துன்புறுத்தப்பட்ட நான் ஏப்ரல் மாதத்தில் இந்திய ராணுவத்தின் உதவியால் விடுவிக்கப்பட்டேன். இந்திய எல்லைப் பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் சீன ராணுவத்தினரால் கடத்தப்படுவது அதிகமாகியுள்ளது” என்று கூறினார் டோங்லே சிங்காம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments